நீதி
கதைகளின் இறுதியிலும்
வாழ்வின் இறுதியிலும்
போடப்படும் டைட்டில் கார்ட்
அறியாமை
ஒளி ஏற்றுகிறது
அரசியல்வாதிகளின்
வீட்டில்
ஆணின் சலனத்திற்கு
”U” சான்றும்
பெண்ணின் சலனத்திற்கு
“A “ சான்றும் தருவதில்
தெரிகிறது
ஆதிக்க நாயகர்கள் யாரென