Friday 28 April 2023

பிரிவு

 

  

வார்த்தைகள் அனைத்தையும்

மெளனச் சிறையில் நிரப்பியிருக்கிறேன்

எதாவது ஒரு பொழுதில்

மிதந்தலையக்கூடும் ஒரு

பஞ்சுக்குவியலைப்போல

இப்பிரபஞ்சம்

என் பெருமூச்சால்

Tuesday 11 April 2023

    

நீயே நீயே!

வாழ்வதற்கு ஒரு
காரணம் இருக்க
முடியுமெனில் அது
உன் அன்பாகத்தான்
இருக்கமுடியும்
உனக்கு பின்னான
என் வாழ்வில்
அர்த்தங்கள்
ஏதுமில்லை..
உன் நேசத்தில்
நிரம்பிய என்
இதயம் துடிப்பதை
கைகட்டி கவனிப்பதைத் தவிர! - ஜ்வாலா

Thursday 3 September 2020

 WOMEN'S WEB TAMIL இல் வெளியான என் கட்டுரைகளின் லிங்க் இங்கு 

பகிர்கிறேன்

https://www.womensweb.in/ta/topic/social-issues-2/

‘ஒருதலை காதல்’ – இது ஆண்களுக்கு சினிமா கொடுக்கும் ஒரு அனுமதியா?

https://www.womensweb.in/ta/2020/07/oruthalai-kaadal-tamil-movies/

பெண்மையைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்த 3 படங்களும் ஒரு இனிய விருந்தே!

https://www.womensweb.in/ta/2020/06/women-oriented-movies-netflix-amazon-tamil/

தமிழ் சீரியலும் பெண்களின் சித்தரிப்பும்: காலகாலமாய் தொடரும் கொடுமைகள் மாறுமா இந்த நிலை?https://www.womensweb.in/ta/2020/07/tamil-serial-pengalin-nilai-women-portrayal/

இது பொம்பளைங்க வேலை’ – காலம் மாறியது, பார்வைகள் மாறியதா?

https://www.womensweb.in/ta/2020/07/womens-work-gender-stereotypes-tamil/


Sunday 19 July 2020

கவிதை சிதறல்கள்

நீதி
                          கதைகளின் இறுதியிலும்
                          வாழ்வின் இறுதியிலும்
                          போடப்படும் டைட்டில் கார்ட்

        அறியாமை
        ஒளி ஏற்றுகிறது
        அரசியல்வாதிகளின்
        வீட்டில்

                           ஆணின் சலனத்திற்கு
                                                              ”U” சான்றும்
                           பெண்ணின் சலனத்திற்கு
                                                               “A “ சான்றும் தருவதில்
                           தெரிகிறது
                           ஆதிக்க நாயகர்கள் யாரென


Thursday 25 June 2020

தனிமையின் துளிகள்

ஏகாந்தம் பூசிய இரவின்  பிற்பகுதியில்
சுவர்க்கோழியின் ரீங்காரமென
வதைக்கிறது உன் நினைவுகள்
விழிகள் இறுக மூடி,
"ஒன்றிரண்டு என எண்ணத்துவங்கு
 தூக்கம் வரும் என்று  நீ
 சொன்னதாய் நினைவு.
 எண்ணத்துவங்கும்போதெல்லாம்
 உன் எண்ணத்தில் தொலைவது
 வாடிக்கை ஆனதில்
இருள் வானம்  வெளுத்து நீலமாய் ---
 இமை ஓரம் சேர்ந்து பாரமாய்
வழிகிறது  நேசத்தின் துளிகள்!

பிரிவு

     வார்த்தைகள் அனைத்தையும் மெளனச் சிறையில் நிரப்பியிருக்கிறேன் எதாவது ஒரு பொழுதில் மிதந்தலையக்கூடும் ஒரு பஞ்சுக்குவியலைப்போல இ...