Thursday, 25 June 2020

தனிமையின் துளிகள்

ஏகாந்தம் பூசிய இரவின்  பிற்பகுதியில்
சுவர்க்கோழியின் ரீங்காரமென
வதைக்கிறது உன் நினைவுகள்
விழிகள் இறுக மூடி,
"ஒன்றிரண்டு என எண்ணத்துவங்கு
 தூக்கம் வரும் என்று  நீ
 சொன்னதாய் நினைவு.
 எண்ணத்துவங்கும்போதெல்லாம்
 உன் எண்ணத்தில் தொலைவது
 வாடிக்கை ஆனதில்
இருள் வானம்  வெளுத்து நீலமாய் ---
 இமை ஓரம் சேர்ந்து பாரமாய்
வழிகிறது  நேசத்தின் துளிகள்!

No comments:

Post a Comment

பிரிவு

     வார்த்தைகள் அனைத்தையும் மெளனச் சிறையில் நிரப்பியிருக்கிறேன் எதாவது ஒரு பொழுதில் மிதந்தலையக்கூடும் ஒரு பஞ்சுக்குவியலைப்போல இ...